search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள்"

    இரவு தூங்காமல் கண்விழித்து வேலைப்பார்ப்பவர்கள் ஆரோக்கியம் அதிக அளவு பாதிக்கப்பட்டு நோய்கள் ஏற்படும் என புதிய ஆய்வில் அதிர்ச்சி தகவல் ஏற்பட்டுள்ளது. #research
    வாஷிங்டன்:

    உலகில் உள்ள மக்கள் பரப்பரப்பான் சூழ்நிலையில் வேலைப்பார்த்து வரும் நிலையில் அவர்களுக்கு இரவு, பகல் என்பது தெரியாமல் போனது. அதனால் அவர்கள் இரவு கண்விழித்து பணிபுரிகின்றனர். இரவு தூங்காமல் கண்விழித்து பணிபுரிவதால் பல் நோய்கள் ஏற்படும் என புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    ஆய்வின் படி, இரவில் வேலைப்பார்க்கும் போது ரத்தத்தில் உள்ள புரோட்டின் அதிகரிக்கிறது. அவை ரத்தத்தில் உள்ள சர்க்கரை, ஆற்றல் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கிறது. இதனால் எளிதாக நோய்கள் ஏற்படுகின்றன. இது மற்றவர்களை விட இரவு பணியில் ஈடுபடுவர்களை விட அதிகமாக ஏற்படுகிறது.

    இந்த ஆய்வில் மனிதர்களின் ரத்தத்தில் உள்ள புரோட்டின் சோதனை செய்யப்பட்டது. 24 மணி நேரத்தில் தூக்கம், உணவு நேரங்களில் புரோட்டினின் அளவு எவ்வாறு இருக்கிறது என்பதன் மூலம் அறிக்கை வெளியிடப்பட்டது. இது இரவில் வேலைப்பார்ப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. #research
    ×